தேவகோட்டை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 32 வருடத்திற்கு பின்பு சந்திப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை பள்ளி மாணவிகள்(1991-1993) 32 வருடங்களுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்வு மெஹர் இன் ஹோட்டலில் நடைபெற்றது. இறை வணக்கப்பாடலுடன் தொடங்கியது ஆசிரியை அனன்சியா தொடங்க உறவின் சங்கமம் நிகழ்வானது ஆரம்பமானது.
மாலதி அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஒருங்கிணைப்பாளர் அனிதா தலைமை ஏற்றார். ஒருங்கிணைப்பாளர் சுதா முன்னிலை வகித்தார். மலர்விழி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். வருகை புரிந்த நண்பர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். பள்ளி பருவத்தில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் நீங்காத மலரும் நினைவுகளாக ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாக தங்களின் உள்ளார்ந்த அன்பை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான நினைவுகளை ஞாபகப்படுத்தி ஒவ்வொருவரும் கூறி மகிழ்ந்தனர். ஆடல் பாடலுடன் ஒருவருக்கொருவர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி 32 வருடங்களுக்கு முன்பு உள்ள பள்ளியின் செயல்பாடுகளை பெருமையாக பேசி தங்களின் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை நினைத்து மகிழ்ந்தனர். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி முதுகலை பட்டதாரி ஆசிரியர் மைக்கேல் பொறியாளர் ஜான் வாழ்த்துரை வழங்கினர். நித்திலா பிரசன்னா மலர்விழியின் பரத நாட்டியமும் பேராட்சி செல்வியின் நடனமும் கண்கவர் விருந்தாக அமைந்தது.
அருள்சகோதரி அமலி பாக்கியலட்சுமி ஜான்சி பெப்பின் சாந்தி கலைசெல்வி ஆகியோர் பாடல்கள் பாடி மகிழ்வித்தனர். மைதிலி நன்றி கூறினார். ரேவதி சுதா திலகவதி பிரமிளா ராணி பிளாரன்ஸ் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.



