மாவட்டச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நகரில் எங்கு பார்த்தாலும் ஆட்டோ பார்க்கிங் விதிமுறைகள் மீறல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வளர்ந்து வரும் மாவட்டங்களில் தென்காசி உள்ளது
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இயற்கை சுற்றுலா தலங்கள் ஒன்றிணைந்த மாவட்டமாக தென்காசி தனி சிறப்பு பெற்ற மாவட்டமாக இருக்கிறது அண்டை மாநிலம் கேரளாவின் அருகிலும் இம் மாவட்டம் உள்ளது
குற்றாலம் பகுதிக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பல்வேறு மாநிலம் மாவட்டங்களில் இருந்து வருவது சிறப்பாக உள்ளது நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது தென்காசி மாவட்டம்
குறிப்பாக பல்வேறு இடங்களில் திடீர் முளைத்திருக்கும் ஆட்டோ ஸ்டாண்டுகள்
இதை முறைப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்..
குறிப்பாக தென்காசி பகுதியில் தற்போது பல இடங்களில் ஆட்டோ ஸ்டாண்டுகள் முளைத்திருக்கிறது
இதை சரி செய்ய மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 5000 ஆட்டோவிற்கு மேல் இருக்கிறது
இங்கு எந்த ஒரு தொழிற்சாலை இல்லாத காரணத்தால் ஆட்டோக்கள் அதிகரித்திருக்கிறது
ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல்
அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சட்டதிட்ட விதிமுறைகள் விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தி முறைப்படுத்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஒன்றிணைந்து தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் வரவழைத்து சிறப்பு கூட்டத்தை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்ககோரிக்கை
எங்கு பார்த்தாலும் ஆட்டோ பார்க்கிங் போக்குவரத்திற்கு இடையூறாக ஆங்காங்கே இருக்கிறது குறிப்பாக பழைய பேருந்து நிலையம் வேன் நிறுத்தம் உள்ளே இருந்து வெளியே வரும்பொழுது இரு பக்கங்களும் ஆட்டோக்கள் நிற்கிறது போக்குவரத்து நெருக்கடி மேடம் இந்த சட்ட விரோதமாக மினி பேருந்து நிலையம் உள்ளது. புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் ஜவுளிக்கடை அருகில் ஆட்டோ பார்க்கிங் ஆக மாறி இருக்கிறது. கோவில் வாசல் பழைய நீதிமன்றம் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் நீதிமன்றம் பின்புறம் ஆட்டோ ஸ்டாண்ட் கோவில் வாசல் இடது பக்கம் ஆட்டோ ஸ்டாண்ட் கோவில் வாசல் வலது பக்கம் ஆட்டோ ஸ்டாண்ட் மேல ரத வீதி கீழ ரத வீதி கூலக்கடை பஜாரின் ஆட்டோ ஸ்டாண்ட் ஆய்க்குடி செல்லும் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் கொடி மரத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் தாலுகா அலுவல முன்பு ஆட்டோ ஸ்டாண்ட் ரயில்வே நிலையத்திற்குள் ஆட்டோ ஸ்டாண்ட் ரயில்வே வெளிப்புறம் ஆட்டோ ஸ்டாண்ட் பெண்கள் பள்ளிக்கூடம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் புதிய நீதிமன்றம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் யானை பாலம் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் எஸ் பி அலுவலகம் செல்லும் முன் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் மீரான் மருத்துவமனை முன்பு ஆட்டோ ஸ்டாண்ட் இவை அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும் இவையெல்லாம் ஒருங்கிணைத்து போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு இல்லாமல் நிற்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் அந்தந்த ஊர் சார்பாக எந்தெந்த பகுதியில் எத்தனை ஆட்டோக்கள் இயங்குகிறது முறையான ஓட்டுநர் லைசன்ஸ் முறையான ஆட்டோ ஆவணங்கள் இவை எல்லாவற்றிலும் அந்தந்த காவல் நிலையத்தில் பராமரிக்க செய்ய வேண்டும் தற்போது சில நாட்களில் சீசன் ஆரம்பிக்கும்போது பல்வேறு ஊர்களில் இருந்து வாடகைக்கு ஆட்டோவை ஒப்பந்தம் எடுத்து ஆட்டோ கொண்டு வருகிறார்கள் ஆகவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கோரிக்கை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button