ஒரு கட்சி ஆட்சி ஜனநாயகத்துக்கு விரோதமானது- திமுக ஆட்சியில் அமைச்சர்கள் தொகுதியில் சாதிய பாகுபாடு அதிகம் இருக்கிறது – புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறும் போது தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஒரு கலாச்சாரமாக உள்ளது. வாக்காளர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து சரியான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். கனிசமான இடங்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். கூட்டணி அமைத்து போட்டியிட்டுவிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் இடம் இல்லை என்று மாற்ற முடியாத விதி போல் கடைபிடித்து வருகின்றனர். அதை இந்த தேர்தலில் மாற்றுவது எங்களது நோக்கம். ஒரு கட்சி ஆட்சி ஜனநாகயததிற்கு விரோதமானது. அதனால் தான் நாங்கள் கூட்டணி ஆட்சியை வலியுறுத்துகிறோம். மகாராஷ்டிரம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒரு கட்சி பெரும்பான்மையாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கின்றனர். நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பட்டியலின மக்கள், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கொடுத்ததே அதிகாரத்துக்கு வரத் தான். அப்போது தான் அவர்களது பிரச்சினையை தீர்க்க முடியும். ஆனால் அவர்களை அதிகாரத்திலிருந்து வெகுதூரம் தள்ளி வைக்கின்றனர். அதனால் தான் அவர்களது பிரச்சினையும் அப்படியே இருக்கிறது. அதனால் சாதி பிரச்சினை தொடர்கிறது. கூட்டணி அரசை அமைக்க விரும்பும் கட்சியுடன் கூட்டணி என்ற கோட்பாடுடன் இருக்கிறோம். எங்கள் சமூக முன்னேற்றத்துக்கு கூட்டணி ஆட்சியை தீர்வு.
திமுக ஆட்சியில் அமைச்சர்கள் தொகுதியில் சாதிய பாகுபாடு அதிகம் இருக்கிறது. தேர்தலில் கூட்டணி வைப்பது முக்கியமல்ல. நேர்மையான முறையில் கூட்டணி தர்மம் அடிப்படையில் பணியாற்ற வேண்டும். இன்னும் தேர்தலுக்கு ஒரு மாத கால அவகாசம் உள்ளதால் கூட்டணிக்கு ஏன் அவசரப்பட வேண்டும். கூட்டணி கட்சிகள் எங்கள் வெற்றிக்கு பாடுபட்டால், நாங்களும் பாடுபடுவோம் என்று கூறினார்
மாவட்ட செய்தியாளர் கண்ணன்



