தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் இருமதி ஸ்ரீ பாலாருடைய அய்யனார்,ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மாசி மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு இன்று மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

இராமநாதபுரம்,சிவகங்கை,புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.தொழுவில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டனர் சீறி வந்த காளைகளை எதிர்த்து மாடு பிடி வீரர்கள் விளையாடினர்.வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும்,மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.இதை காண ஏராளமான மஞ்சுவிரட்டு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.முன்னதாக மஞ்சு விரட்டு திடலில் ஆங்காங்கே கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டது.
மாவட்ட செய்தியாளர் கண்ணன்



