சிவகங்கைமாவட்டச் செய்திகள்

காளையார்கோவிலில் அறிவியல் கருத்தரங்கம்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரியில்,BRIGHTLA-2026 , தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம், புனித மைக்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் Ln.Dr. M. ஸ்டாலின் ஆரோக்கியராஜ் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது .

இந்த நிகழ்விற்கு மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் SENIOR TECHNICAL OFFICER(CECRI),முனைவர்.V. சரவணக்குமார் தலைமை ஏற்று மாணவ, மாணவிகளுக்கு அறிவியலின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து தலைமை உரை ஆற்றினார்.

புனித மைக்கேல் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி, Ln. Dr.J. பிரிட்ஜெட் நிர்மலா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் .என் .மகேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த அறிவியல் கருத்தரங்கில் மதுரை சோலைமலை பாலிடெக்னிக் கல்லூரி , அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி , காரைக்குடி நாச்சியப்பா சுவாமிகள் பாலிடெக்னிக் கல்லூரி , கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி , மற்றும் காளையார் கோயில் சுதந்திரா பாலிடெக்னிக் கல்லூரி பங்கு பெற்றனர்.இந்த அறிவியல் கருத்தரங்கினை Research& Development Admin அசோக் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார். சத்யபிரியா விரிவுரையாளர் ,மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நன்றி உரை கூறினார். நிறைவாக தேசிய கீதம் பாட விழா இனிதே நிறைவுற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button