மாவட்டச் செய்திகள்ராமநாதபுரம்

பள்ளியின் 116 வது ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்உத்திரகோசமங்கை தொடக்கப் பள்ளி 116 வது ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மாணிக்க ஜோதி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை பாலா வரவேற்றார். முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை மாவட்ட கல்வி அலுவலர் ரவீந்திரன் தொடங்கி வைத்து, மாணவர்கள் கல்வியில் பல சாதனைகள் படைக்க புத்தக வாசிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி பேசினார். பல்வேறு போட்டிகள், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர், இடைவிடா வருகை புரிந்த மாணவருக்கு வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி விருது, சான்றிதழ் வழங்கினார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் சேதுபதி, ஆசிரிய பயிற்றுநர்கள் பாண்டியராஜன், செல்வகுமார் பேசினர். முன்னாள் மாணவர்களான துணை ஆட்சியர் (ஓய்வு) செழியன், உதவி ஆணையர் (ஓய்வு) தம்பிதுரை ஆகியோர் பள்ளி வளர்ச்சிக்கு நிதி உதவி அளித்தனர், பெற்றோர், கிராம முக்கியஸ்தர் கலந்து கொண்டனர். , விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பள்ளி மேலாண் குழு சார்பில் அங்குச்சாமி சான்றிதழ் வழங்கினார்.

அறநிலையத்துறை தணிக்கை கண்காணிப்பாளர் அசோக் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், மருத்துவர் கபிலன் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி அளித்தனர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் சேக்கிழார் ஒருங்கிணைத்தார். ஆசிரியை செல்வமாலதி நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button